நிகழ்ச்சியைப் பற்றி

நிகழ்ச்சியைப் பற்றி

நீங்கள் 2021ன் சிறந்த புத்தாக்க சிந்தனை கொண்ட முயற்சியாளரா?

 

இந்நகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டிகளிடமிருந்து

ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றுகொள்ள முடியும். இதன்மூலம்

போட்டியாளர்கள் தமது புத்தாக்க சிந்தனைகளை சமகால சந்தையில்  போட்டியிடக்கூடிய சாத்தியமான வணிக தயாரிப்புகளாக மாற்றிகொள்ள முடியும். தெரிவு செய்யப்பட்ட வழிகாட்டிகளினால் வழங்கப்படும் ஆலோசனைகளின் மூலம் இச்செயற்பாடு எளிதாக்கப்படும். 

புத்தாக்கமான சிந்தனை கொண்ட தயாரிப்பு அல்லது சேவை, படைப்பாற்றல் நிலை, வணிக நம்பகத்தன்மை, சாத்தியமான போட்டித்திறன், நிலைத்தன்மை, வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக ஏற்றுக்கொள்ளல் மற்றும் வணிகத்தை விரிவுபடுத்தும் திறன் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டே தேர்வுகள் மேற்கொள்ளப்படும். மிக சிறந்த தொழில் முயற்சியாளர்களாக தெரிவு செய்யப்படும் முதல் மூன்று வெற்றியாளருக்கு தமது தொழில் முயற்சியினை விஸ்தரிப்பதற்காக 3Million வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியானது டிவி தெரண வலையமைப்பு, பார்ட்னர் ஃபோர் குட் என்ற ஜோர்தானிய சேவைநோக்க அமைப்பு மற்றும் USAID என்ற இளையோருக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடக்க நிறுவனங்களினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நிகழ்ச்சி

ஸ்டார்ட்அப் 2021 என்பது இளம் தொழில்முனைவோருக்கான ரியாலிட்டி நிகழ்ச்சித்  திட்டமாகும்

இது வளர்ந்து வரும் இலங்கையின் இளம் தொழில் முனைவோரின்  திட்டங்களை ஊக்குவித்து வழிநடத்தி, சிறந்த விருப்பத்திற்கு வாக்களிக்க சமூகத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.


இது ஜோர்தானிய தொலைகாட்சி நிகழ்ச்சியான ‘Mesh Mostaheel’ (சாத்தியமற்றது அல்லாத) என்ற நிகழ்ச்சியினை தழுவி, பார்ட்னர்ஸ் ஃபோர் குட் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்படுகிறது.

 

ஒளிபரப்பு :  

Satellite :சனிக்கிழமைகளில் –  பி.ப 9:30 மணிக்கு – அத தெரண 24

Online: அத தெரண 24

நீங்கள்?

  • 35 வயதிற்கு குறைந்த இளம் தொழில் முயற்சியாளரா??
  • 24 மாதங்களாக குறித்த வணிக செயற்பாட்டில் ஈடுபடுபவரா?
  • ஒரு புதிய தயாரிப்பை / சேவையை  அல்லது வணிக ரீதியில் சாத்தியமான தயாரிப்பை / சேவையை, வணிகமயமாக்குவதற்கு தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆதரவு தேவைப்படுகிறதா?
  • சமூகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, சிறந்த குறிக்கோள்களுடைய  தயாரிப்பு / சேவையை கொண்ட இளம் தொழில் முயற்சியாளரா?

ஸ்டார்ட் அப் 2021 – அடைய முயற்சிப்பது?

  • வணிகமயமாக்கல் கலாச்சாரத்தினை இளையோரிடத்தில் வளர்த்தல்.
  • புத்தாக்க சிந்தனை கொண்ட வணிக தயாரிப்புகளை, சேவைகளை ஆதரிப்பது.
  • சமூக சேவை
  • பகிர்வு